இந்தியா
Typography

தமிழ்நாட்டில் பொது மக்களின் கோபத்தை உச்சக் கட்டமடையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் வெளியிட்டதாக உறுதிப் படுத்தப் படாத ஆடியோ ஒன்று சில ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 24 ஆம் திகதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தக் குற்றச் செயல் அம்பலமாகி இருந்தது.

இப்புகாரின் அடிப்படையில் ஃபேஸ்புக் மூலம் கல்லூரிப் பெண்களிடம் நட்பாகப் பழகி அவுட்டிங் என்ற பெயரில் வெளியே இரகசிய இடத்துக்குப் பலவந்தமாக அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து பல நூற்றுக் கணக்கான பெண்களிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்த கும்பல் சமீபத்தில் கைது செய்யப் பட்டது. இவ்வாறு கைதானவர்களில் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த குமார் மற்றும் குறித்த பெண்ணைக் காதலித்து ஏமாற்றிக் கூட்டி வந்த சபரிராஜன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டுள்ளதால் உடனடியாக குறித்த பாதிக்கப் பட்ட பெண்ணைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் வெளியில் விளம்பரப் படுத்தி இவ்விவகாரம் அரசியலாக்கப் பட்டு விட்டதாகவும் இதனால் முன்னர் பாதிக்கப் பட்ட எந்தவொரு பெண்ணுமே குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் எனவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண் வருத்தத்துடன் தனது வாட்ஸ் ஆப் ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யாரும் இல்லை. எனவே இதை அரசியல் ஆக்காமல், தயவுசெய்து இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அனைவரிடமும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் குறித்த ஆடியோவில் பாதிக்கப் பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோவின் நம்பகத் தன்மை பற்றிய விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது..

நன்றி, தகவல் : விகடன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்