இந்தியா
Typography

அண்மையில் பொள்ளாச்சிப் பகுதியில் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப் பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கில் சமீபத்தில் குறித்த குற்றச் செயலில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இக்குற்றச் செயல் பற்றிய தகவல் மற்றும் வீடியோ ஆதாரங்களும் அவற்றில் பெண்கள் கெஞ்சிக் கதறி அழுவது போன்ற காட்சிகளும் வெளியானதால் தமிழக மக்கள் மட்டுமன்றி இந்தியளவில் பெற்றோர்களும், பொது மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சிறிதும் மன்னிப்பு அளிக்காது உச்சபட்சத் தண்டனை அளிக்கப் பட வேண்டும் எனவும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பாலியல் பலாத்கார குற்றச் செயலில் தொடர்புடைய சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் போலிசாரால் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர்.

கைது செய்யப் பட முன்பே மணிகண்டன் முன்ஜாமின் கேட்டுள்ளதால் இவ்வழக்குத் தொடர்பில் முழு விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்