இந்தியா
Typography

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையைத் தாண்டி ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் உளவு விமானத்தை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக பெப்ரவரி 26 ஆம் திகதி பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை பதில் தாக்குதலைத் தொடுத்த அன்று காலையில் குஜராத் மாநிலத்தின் குட்ச் மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டிருந்தது.

இதையடுத்து இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்னேர் பகுதியில் வட்டமிட்ட பாகிஸ்தானின் டிரோன் விமானம் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. தொடர்ந்து ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் மீண்டும் அத்துமீறி நுழைந்த இன்னொரு டிரோன் விமானமும் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. பெப்ரவரி 26 பாகிஸ்தான் மீதான தாக்குதலின் பின் இதுவரை இவ்வாறு பாகிஸ்தானின் 3 உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்