இந்தியா
Typography

புதன்கிழமை சென்னை அருகே அதிமுக தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் போது அவர் தமிழகம் நலம்பெற மத்திய அரசின் முயற்சி தொடர்ந்து இருக்கும் என்றும் ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்றப் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

சென்னை செண்ட்ரல் ரயில்வே நிலையம் எம்ஜீஆர் பெயரால் இனி அழைக்கப் படும் என்று தெரிவித்த மோடி தமிழகத்துக்கு வந்து செல்லும் விமானங்களில் இனி தமிழிலும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். காஞ்சிபுர நெசவாளிகள் பயன்பெறும் விதத்தில் ஜவுளித் துறைக்கென 7000 கோடி ரூபாய் மானியம் வழங்கப் பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார். இதுதவிர தமிழகத்தின் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறைய மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் மோடி கூறினார்.

விரைவில் நாட்டின் பாதுகாப்புக்கென் அமைக்கப் படவுள்ள இரு பூங்காக்களில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப் படும் என்றும் நாட்டின் பாதுகாப்பில் எதிர்க்கட்சிகள் அலட்சியம் காட்டுவதாகவும், வலிமையான இராணுவத்தை இவர்கள் விரும்பவில்லை என்றும் பேசிய மோடி, நாட்டு மக்களே உச்ச பட்ச கமாண்டர்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தன் மீது வெறுப்பைப் பொழிவதற்கென்றே ஒரு பகுதி மக்கள் இருப்பதாகவும் அவர்கள் தம் குடும்பத்தைப் பற்றித் தன் ஏழ்மையைப் பற்றி மற்றும் பின் தங்கிய சாதிப் பின்புலம் பற்றியெல்லாம் தவறாகப் பேசுவதாகவும், சிலர் என்னைக் கொல்லக் கூட நினைக்கின்றார்கள் என்றும் வருத்தம் தெரிவித்த மோடி தமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கினால் அவர்கள் ஆசிர்வாதத்தில் அவர்களின் பாதுகாப்பு உட்பட ஏனைய தேவைகளுக்காகவும் நிறைய செய்வோம் என்றும் கூறினார்.

தனது உரையை முடிக்கும் போது மோடி 'நாளை நமதே! நாற்பதும் நமதே!' என்று கூறி நிறைவு செய்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS