இந்தியா
Typography

காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

உயிரிழந்த ஏனைய வீரர்களாக 3 சி ஆர் பி எப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் போலிசார் 2 பேர், மற்றும் குடிமக்கள் ஒருவர் அடங்குவதாக காஷ்மீர் எஸ் பி பானி தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் தொடர்ந்து 3 ஆவது நாளாக தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சமர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் குப்வாரா மாவட்டத்தின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று தாக்குதலைத் தொடுத்தனர். பதிலுக்குத் தீவிரவாதிகளும் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதன் போதே இவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது இப்பகுதியில் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளதுடன் மேலதிக சி ஆர் பி எப் படை வீரர்கள் அங்கு குவிக்கப் பட்டும் வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS