இந்தியா
Typography

நாட்டு மக்கள் அனைவரும் உறுதியாக ஒன்றிணைந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க, நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: “இந்திய இராணுவம் மீது நம்பிக்கை உள்ளது. பாதுகாப்பு படையினருடன், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். எதிரிகள் நம்மை சீர்குலைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

நமது வளர்ச்சியை தடுத்து நிறுத்த பயங்கரவாதிகள் மூலம் தாக்க முயற்சி செய்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் உறுதியாக நின்று, எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும். அனைவரும் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றாக வளர்வோம். ஒன்றாக போரிட்டு, ஒன்றாக வெற்றி பெறுவோம்.

பாகிஸ்தானின் பொய் தகவல்களை நம்ப கூடாது. இந்தியாவின் தார்மீக உறுதியை பாகிஸ்தானால் சீர்குலைக்க முடியாது. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய இளைஞர்கள் அனைவரும் இன்று உற்சாகமாக உள்ளனர். விவசாயிகள் முதல் இளைஞர்கள் என அனைவரும், சாத்தியமில்லாத அனைத்தும் சாத்தியம் ஆகும் என நம்புகின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்