இந்தியா
Typography

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் 1000 கிலோ வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.

இத்தாக்குதலுக்கு பாலாகோட், சாக்கோட் மற்றும் முஸாராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப் பட்டுள்ளன.

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் கிராம வாசிகள் சிலர் காயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதலை எதிர்க்கும் வண்ணம் ஐ.நா சபை மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் புகார் அளிக்கப் பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதன் மூலம் எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப் படையினர் தாக்குதலின் எதிரொலியாக இனிமேல் பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப் படாது எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் இந்திய விளம்பரங்களைப் புறக்கணிக்கவும் பாகிஸ்தானின் தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத இலக்குகளைக் குறி வைத்து இந்திய விமானப் படை தாக்கி அழித்தமைக்கு ஆப்கானிஸ்தான் அரசு தனது நன்றியைத் தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்