இந்தியா
Typography

எதிர்வரும் மக்களைவைத் தேர்தலில் பாஜக கட்சி தமிழகத்தின் அதிமுக கட்சியுடன் கூட்டணி சேர முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வந்துள்ளார்.

அதிமுக வின் முக்கிய நிர்வாகிகளான ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரை அமித் ஷா சந்தித்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை மூவரும் வெளியிடவுள்ளனர்.

இக்கூட்டணியில் தேதிமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தக் கூட்டணியில் எச்.ராஜா மட்டும் போட்டியிடக் கூடாது என அதிமுக தலைமை பாஜகவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியாகி உள்ள போதும் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 இடங்களுமே ஒதுக்கப் பட்டுள்ளன. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை அல்லது மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த போதும் இதனை அதிமுக விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2015 இல் நேபாளத்தில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 71 குடிமக்களை இந்திய மீட்புப் படையினர் மீட்டுச் செய்த சேவைக்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஸ்பெயினில் பொது மக்களுக்கு அளிக்கப் படும் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் விருதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அளித்து ஸ்பெயின் கௌரவம் சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்