இந்தியா
Typography

2018 மே மாதம் 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி மனிதர்களுக்குப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதனால் இதனைத் திறக்கத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி பொது மக்கள் பாரியளவில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

போராட்டத்தைக் கலைக்க போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதும் நாடு முழுதும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். ஏற்கனவே பொது மக்களின் போராட்டத்தின் பலனால் சீல் வைக்கப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அதன் வேதாந்தா நிறுவனம் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் ஆயுவு நடத்தி தமக்குச் சாதகமானத் தீர்ப்பைப் பெற்று அதனைப் 15 நாட்களுக்குள் திறக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்ததுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. கடந்த 7 ஆம் திகதி இந்த வழக்கில் இரு தரப்பு வக்கீல்கள்களினதும் வாதம் முடிவடைந்தது. இதையடுத்து திங்கட்கிழமை ஸ்டெர்லைட் வழக்கின் தீர்வு வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதனைத் திறக்க உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் வேதாந்தா நிறுவனத்தின் அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப் படுவதாகவும், அவர்கள் விரும்பினால் சென்னை ஹைகோர்ட்டை அனுகலாம் என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்