இந்தியா
Typography

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகர்ப் பகுதியில் ரிசர்வ் போலிசார் படை சென்ற பஸ் மீது 350 கிலோ வெடி மருந்து நிரப்பப் பட்ட காரை ஓட்டி வந்து தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் நிகழ்த்தியதை அடுத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலிலும் 44 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெறித்தாக்குதல் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதுகாப்புத் துறையின் மத்திய அமைச்சரவைக் குழு வெள்ளிக்கிழமை காலை 9:15 இற்கு அவசரமாகக் கூடுகின்றது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த 70 பேருந்துக்கள் அடங்கிய பேரணியின் மீது தான் இத்தாக்குதல் குறி வைத்து நடத்தப் பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களில் காஷ்மீரில் நடத்தப் பட்ட மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலான இதற்கு ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதி புல்மாவா மாவட்டத்தைச் சேர்ந்த அடில் அகமது எனவும் இவன் கடந்த வருடம் தான் குறித்த தீவிரவாத அமைப்பில் இணைந்திருந்தான் எனவும் தெரிய வருகின்றது.

இதேவேளை இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குக் தக்க பதிலடி கொடுக்கப் படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் இத்தாக்குதலுக்குத் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்