இந்தியா
Typography

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் சேவை அறிமுகப் படுத்தப் பட்டு 2 ஆவது நாளான இன்று திங்கட்கிழமையே தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு டி எம் எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அதிருப்தியும், சிரமமும் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை ஆரம்பமாகியுள்ளது மேலும் இதனைக் கொண்டாடும் வகையில் ஞாயிறும், திங்களும் நகர் முழுதும் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. இதனால் வழக்கமாக செல்லும் பயணிகளுடன் இலவசமாகப் பயணிக்கவென ஏராளமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையம் வந்திருந்தனர்.

ஆனால் மெட்ரோ சேவையில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அலுவலகங்களுக்குச் செல்வோர், கல்லூரிக்குச் செல்வோர் மற்றும் அவசர வேலைகளுக்குச் செல்வோர் எனப் பலதரப்பினர் பாதிக்கப் பட்டனர். தற்போது குறித்த மெட்ரோ நிலையத்தின் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் சேவை வழமைக்குத் திரும்புமெனவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்