இந்தியா
Typography

தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிய வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் இதனைச் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனவும் அறிய வருகிறது.

மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தமை தொடர்பில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையாகவேஅது உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வரும் நிலையில், மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் பட்ஜெட்டாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS