இந்தியா
Typography

கிங்பிஷர் விமான நிறுவனம் தொடங்குவதற்காகப் பொதுத் துறை வங்கிகளில் ரூ 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாது இலண்டனுக்குத் தப்பிச் சென்ற கர்நாடாகாவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் இவரை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் லண்டனின் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. எனினும் இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS