இந்தியா
Typography

பே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி‌த் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ஈரோடு வந்த வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களை பார்வையிட வராத பிரதமர், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் வாக்குகள் பெறுவதற்காக தமிழகம் வருகின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, ஹைட்ரோ கார்பன், நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தமது ஆட்சிக்காலத்தில் சரியான தீர்வுகளை முன்வைக்காத பிரதமர், ஆட்சி பறிபோகும் நிலையில் அறிவித்துள்ள பட்ஜெட் தேசத்திற்கானது அல்ல எனவும், அது முற்றிலும் தேர்தல் அரசியலுக்கானது எனவும் கூறினார். மேலும், தேர்தலை கருத்தில் கொண்டு,ராஜீவ்கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS