இந்தியா
Typography

தமது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே தமது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் தெலுங்கு தேசக் கட்சி பாஜக கூட்டணியில் இலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் ஆளும் கட்சியின் ஆதரவுடன் நடக்கும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு முன்பு ஆயிரக் கணக்கான ஆந்திர மாநில எம்பிக்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நியிலையில் ஆந்திராவில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து முடங்கி, பெரும்பாலான கடைகளும் மூடப் பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்