இந்தியா
Typography

நடிகர் அஜீத்திற்கு விருப்பம் இருந்தால், அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவ பதவி வகிக்கலாம் எனவும், ஆலோசகராச் செயற்படலாமெனவும், விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து மாதங்களாக, மேற்படி பல்கலைக்கழகத்தின், ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றியதைத் தொடர்ந்து, அவரின் பங்களிப்பை பாராட்டிய அண்ணா பல்கலைக்கழகம், அவருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார், எம்.ஐ.டியின் ‘தக்‌ஷா’ மாணவர்கள் அணி முயற்சித்த, ஆளில்லா விமானத்திற்கான பணியில் , தன்னை இணைத்துக் கொண்டு, அணியின் ஆலோசகராகவும், ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் விமானியாகவும் பணியாற்றியுள்ளார்.

அவசர காலங்களில் ஒருவரை சுமந்து செல்லும் எண்ணக்கருவோடு, ஆளில்லா ஏர் டாக்சி என்ற பெயரில் பரிசோதிக்கப்பட்ட ஆளில்லா விமானம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும்கவனம் பெற்றுள்ளது.

ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவுத்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், இந்த திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் , அவருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, வரும் காலங்களில் விருப்பமிருந்தால், கௌரவ பதவியிலமரந்து, ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. நடிகர் அஜித்குமார், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்