இந்தியா
Typography

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, அவர் உரையாற்றிய போது, இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாகவும், பொருளாதார சீர்த்திருந்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், வங்கித்துறையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிக்கும் நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமெனவும், சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பெறும் 6 ஆயிரம் ரூபாய்கள், மூன்று தவணைகளாக வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும் எனவும், 2 ஹெக்டர் நிலமுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டார்.

உலகின் பொருளாதார வளர்ச்சி நாடுகள் பட்டியலில், 11வது இடத்திலிருந்த இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை மார்ச் மாதத்திற்குள் உருவாகுமெனவும், மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும் எனவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்