இந்தியா
Typography

சமீபத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொது மக்களும் பாதிக்கப் படுவதாகக் கூறி அவர்களது வேலை நிறுத்தத்துக்குத் தடைகோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த போது, தமக்கு, 21 மாத நிலுவைத் தொகை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் புதிய கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

ஆனால் நீதிபதிகளோ அரசின் நிதி நிலை மற்றும் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் தலையிட முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இதனைச் சட்ட ரீதியாக அணுகாது அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதற்கு எம்மால் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு மேலும் பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இதேவேளை போராட்டம் காரணமாக பணிநிறுத்தம் செய்யப் பட்ட ஆசிரியர்களது வெற்றிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யவும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் விரும்பினால் விரும்பும் ஊருக்கு டிரான்ஸ்பர் தரவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களது இடத்துக்கான விண்ணப்பங்கள் இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்