இந்தியா
Typography

ஞாயிற்றுக்கிழமை மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தார்.

இவரது வருகைக்கு எதிராக மதிமுக தொண்டர்கள் கருப்புக் கொடியுடன் ஞாயிறு காலை முதலே மதுரை பெரியார் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களைக் காண வராதவர் ஏன் இந்த நிகழ்வுக்கு மட்டும் வரவேண்டும் என்ற நியாயத்தை முன் வைத்து சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் மதிமுக தலைவர் வைகோ மற்றும் மே 17 இயத்தினரின் தலைவர் திருமுருகன் காந்தியையும் காவல் துறை கைது செய்தது.

இயற்கை எம்மை துவம்சம் சேய்த போது ஒரு முறையாவது இங்கு வந்து தமிழக மக்களைப் பார்த்திராத மோடி மற்றும் அவர் சார்ந்த நபர்கள் தமிழக இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்கும் திட்டங்களிலும் உள்ளனர் என எதிர்ப்புப் போராட்டத்தின் போது உரையாற்றிய வைகோ தெரிவித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தமிழகத்தில் மோடிக்குக் கருப்புக் கொடி காணப்பட்டது ஏன் என்பதை அவர் கவனிக்க வேண்டும் எனவும் தமிழகத்தை அவல நிலையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பு பொது மக்களுக்கு உள்ளது என்றும் கடலூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்