இந்தியா
Typography

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பிலுள்ள ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பலர் கைது செய்யப் பட்டு விடுவிக்கப் பட்ட போதும் விடாமல் ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்வதால் சுமார் 422 ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்து அரசின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வெளியிடப் பட்ட அறிக்கையிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 'அதாவது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். இவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நாட்களில் சம்பளம் கட்டுப் படுத்தப் படும். இவர்கள் 28 ஆம் திகதிக்குள் பணிக்குத் திரும்பா விட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். தற்காலிகமாகப் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் நாளை மற்றும் அதற்கு அடுத்த தினமும் விண்ணப்பிக்க முடியும்.'

இதேவேளை சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் அரச அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு குறித்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.
இதை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பிரச்சினைக்கு விரைவில் பொருத்தமான தீர்வு எடுக்கப் படும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்