இந்தியா
Typography

தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, மத்திய பட்ஜெட்டில் வாய்ப்பிருப்பதாக அறிய வருகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.

ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெப்ரவரி முதலாந்திகதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிய வருகிறது.

இந்த இடைக்கால பட்ஜெட்டில், தற்போது தனி நபரின் ஆண்டு வருவாய் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டியுள்ள நிலையினை மாற்றி, வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியவருகிறது. இதேவேளை இதனால் அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்படும் என்ற அச்சமும் உள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்