இந்தியா
Typography

மேற்கு வங்காளத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. அங்கு நடைபெறும் காவல்துறையின் ராஜ்யத்தில், போலீஸ் அதிகாரிகள் தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுமித்ரா கான, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இது தொடர்பில், பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசிய சவுமித்ரா கான், பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் நரேந்திர மோடியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதனால், பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளதாக சவுமித்ரா கான் தெரிவித்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில், வரும் மக்களவைத் தேர்தலில், 22 ல் வெல்ல பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துச் செயற்படும் தற்போதைய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் பெறுவதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.பி.க்களும் பாஜகவுடன் இணைவதற்கு ஆயத்தமாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்