இந்தியா
Typography

தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சிறப்பு அமர்வில் விசாரித்து வருகின்றார்கள்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், தனக்கு அலுவலகம் இன்னும் முறையாக ஒதுக்கப்படவில்லை, அதனால் அலுவலகம் இன்றி நடுத் தெருவில் நிற்பதாகவும் தெரிவிக்த்தார்.

அரசு தலைமை வழக்கறிஞரிடம் இது தொடர்பில் நீதிபதிகள் விளக்கம் கோரிய போது, ஓய்வு பெற்ற ஒருவர் காவல்துறை கீழ் உள்ள அதிகாரிகளை எப்படி இடமாற்ற செய்ய முடியும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் விளக்கம் கேட்டார். ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும்போது சிறப்பு அதிகாரி ஏன் தொடர முடியாதெனவும், பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்களாகியும் இன்னமும் ஏன் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை எனவும், நீதிபதிகள் பதிற்கேள்வி எழுப்பினர்.

இக் கேள்விகளுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தி தராமையால், சிலைக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டதிலிருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை எனவும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இவ் வழக்கில் அரசின் நிலைப்பாடும் செயல்பாடும் என்ன என்பதை விளக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 21 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்