இந்தியா
Typography

குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஜெயந்திலால்பானுஷாலி ஓடும் ரயிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் அகமதாபாத்தில் இருந்து பூஜ் நகருக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கையிலேயே கொலைசெய்யப்பட்டுள்ளார். 53 வயதான பானுஷாலி, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை குஜராத் சட்டப்பேரவையில், அப்தாஷா தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.

கடந்த ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, குஜராத் மாநில பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை அப் பெண் திரும்பப் பெற்றதால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மீதான வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உயிரிழந்த பானுஷாலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடவியல் துறை மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்