இந்தியா
Typography

திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். அதேபோல் இந்த தேர்தலுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் குரல் கொடுத்தன.

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரும் சேதம் அடைந்திருக்கிறது. அதில் இன்னமும் மீட்பு பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தலை இப்போது நடத்துவது உகந்ததல்ல எனக் கோரியே இக்கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. இந்நிலையிலேயே இந்திய தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை ஏற்று திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மறைவை அடுத்து இத்தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியிருந்ததுஇந்நிலையில் இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டிருப்பதை ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்