இந்தியா
Typography

நடிகர் விஜய் முதற்கொண்டு, கமல், ரஜினி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களும் தற்போதைய தமிழக அரசுக்கு பெரிதும் பயப்படுவதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜயகாந்த் மாத்திரமே உண்மையான ஆண்மகன் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விஜய் என் தம்பியா என எனக்கே சந்தேகமாக இருக்கிறது. சர்கார் திரைப்பட விவகாரத்தின் போது «நான் ஜெயலலிதா மீது மிகவும் பற்றுக் கொண்டவன்» என பயபக்தியுடன் பேசியதாகவும், தன்னுடைய படங்களில் விஜய் நடிக்காவிடினும், தான் பேசுவதையே, அவருடைய திரைப்படங்களில் பேசித்திரிகிறார் எனவும் கூறினார்.

அதோடு எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட விஜய் பயப்படுவதாகவும், ரஜினி, கமல் எல்லோரும் ஜீரோ தான் ஹீரோ அல்ல எனவும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்