இந்தியா
Typography

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையாக நிவாரணம் கிடைக்காத நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கு எதிர்வரும் 28ம் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்றாம் திகதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 10ம் திகதி முடிவடைகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா நேற்று முன் தினம் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுணில் ஆரோராவை நேரில் சந்துத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாட்ட ஆளுனர் நிர்மல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டனர். இந்நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ள நிலையில், அவர்கள் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கவுள்ளனர். இதையடுத்து திருவாரூர் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்த வாய்ப்பு அதிகரித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்