இந்தியா
Typography

காவல்துறையினரின் உதவியுடன், அதிகாலை வேலை ஆர்ப்பாட்டாம் இல்லாமல் இரு பெண்கள் சபரிமலை ஐயப்பசுவாமி தரிசனம் செய்த காணொளி காட்சிகள் வெளிவந்தது முதல் அங்கு மறுபடியும் எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் சார்பில், சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

«மத்திய அமைச்சருக்கே போக அனுமதியில்லை. இரு பெண்களுக்கு நயவஞ்சமாக சட்டத்தை மீறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக» பாஜகவின் தமிழிசை சௌந்தர ராஜன் கண்டனம் வெளியிட்டுள்ளார்«இந்துக்கள் இனிமேல் விழித்தெழுவார்கள், அவர்களை இனிமேல் யாரும் ஏமாற்ற முடியாது» என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த இரு அரசுபணியாளர் பெண்களும் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோவிலின் புனிதம் சிதைக்கப்பட்டதாக கூறி கோவில் நடைசாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை பாஜக, காங்கிரஸ் மற்றும் பல இந்து அமைப்புக்கள் சார்பில் கறுப்புக் கொடி போராட்டம் கேரளா முழுவதும் நடைபெற்று வருகிறது.

புத்தாண்டு அன்று மாலையில் இரு பெண்களும் சபரிமலை செல்ல உரிய பாதுகாப்பு வழங்கும் படி கேரள அரசு உத்தரவிட்டது.  அதனை தொடர்ந்து உளவுத்தூறை டிஐஜி உள்ளிட்ட சில முக்கிய அதிகாரிகளுக்கும், 20 காவலர்களுக்கும் இந்தப் பணி இரகசியமாக ஒப்படைக்கப்பட்டு குறித்த பெண்கள் சுவாமிதரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட குறித்த இரு பெண்களும், தங்களுக்கு பக்தர்களால் எந்த இடையூறும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS