இந்தியா
Typography

 

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 3ம் திகதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கான பரிந்துரைகள் சூடுபிடித்துள்ளன. திமுக சார்பில், திமுக மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் பரிந்துரைக்கப்பட அதிக சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக சார்பில், .பன்னீர்செல்வம், கலியபெருமாள், மணிகண்டன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட செலயாளர் எஸ்.காமராஜ் அல்லது, திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் சார்பிலோ, ரஜினிகாந்தின் இன்னமும் தொடக்கப்படாத கட்சி சார்பிலோ, இந்த இடைத் தேர்தலில் எவரும் நிறுத்தப்படுவார்களா எனும் கேள்விலும் வெகுவாக மக்கள் மத்தியில் தொக்கிநிற்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்