இந்தியா
Typography

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கிஎறிப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் நாளை முதல்அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப் படுத்துவது, திடக்கழிவு மேலாண் மைக்கு பெரும் சவாலாக உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில், 40 மைக்ரானுக்கு கீழ் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளில் 50 மைக் ரானுக்கு குறைவான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வகை பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்க வேண்டும் என்ற திட்டமும் வெற்றிபெறவில்லை.  இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிக் கப்படுவதை தடுக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5 ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பாக்கெட்கள், பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.  இந்த தடைக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  அரசு அறிவித்துள்ளபடி, தமிழகத்தில் 1-ந் தேதி (நாளை) முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட இருக்கிறது. தடுக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சிகளில் மண்டல வாரியாகவும், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு பகுதிக்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 1-ந் தேதி முதல் தீவிர ஆய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்த ஆய்வின்போது அரசு அறிவித்த மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, வியாபாரம் செய்தாலோ அல்லது அதில் உணவு பொருட்களை கட்டித்தருவது தெரிந்தாலோ அவர்களை இந்த குழுவினர் உடனடியாக மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்துவார்கள். ஆஜர்படுத்தப்படும் நபர்கள் வியாபாரிகளாகவோ, தொழிலாளர்களாகவோ, மக்களாகவோ யாராக இருந்தாலும் அரசின் உத்தரவை மீறியதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்