இந்தியா
Typography

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுவருகிறது. அவ்வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நாவல் கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எழுதியுள்ளார்.

அதோடு இவ்விருதை கரிசல் மண்ணில் உள்ள எளிய நாதஸ்வரக் கலைஞர்களுக்கு அர்ப்பணிப்பதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்