இந்தியா
Typography

இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை, இஸ்ரோ
இன்று விண்ணில் ஏவியது.

திட்டமிட்டபடி தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜிசாட்-11 செயற்கைகோள் 'ஏரைன்-5' என்ற ராக்கெட் மூலம் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

மிகவும் அதிக எடைக்கொண்டதாக (5854 கி.கி.) ஜிசாட்-11 எனும் இந்த செயற்கைகோள் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்