இந்தியா
Typography

ஜி 20 மாநாட்டுக்காக ஆர்ஜெண்டினாவின் தலைநகர் பியெனஸ் அயர்ஸ் இற்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடியை தமது நாட்டின் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுக் கிண்டலாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஊடகத்துக்கு உலகெங்கும் இருந்து இந்தியர்கள் தமது சமூக வலைத் தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குரோனிக்கா என்ற ஆர்ஜெண்டினா டிவி சேனலில் வெளியாகும் சிம்ப்சன்ஸ் என்ற காமெடி கார்ட்டூன் தொடரில் வரும் கதாபாத்திரமான அபு என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக் காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவது போன்ற நைய்யாண்டித் தனமான பாத்திரமாகும். இந்நிலையில் ஆர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்காக வந்த பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்கியதும் 'அபு' வந்து விட்டார் என்ற அடைமொழியுடன் குரோனிக்கா டிவி பிளாஷ் செய்தி வெளியிட்டது.

இந்த நடவடிக்கையானது நிறவெறியின் உச்சக் கட்டம் என கொதிப்படைந்துள்ள இந்தியர்கள் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்