இந்தியா
Typography

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள சீனத் தூதரகத்தின் உள்ளே தீவிரவாதிகளால் மேற்கொள்ளப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இத்தாக்குதல் தற்போது இந்தியத் தலைநகரமான டெல்லியில் திட்டமிடப் பட்டது என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கராச்சி சீனத் தூதரகத் தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு நடத்தியிருக்கலாம் எனவும் அதன் கட்டளைத் தளபதியான அஸ்லம் என்பவன் இதனைத் திட்டமிட்டிருக்கலாம் எனவும் பாகிஸ்தான் கருதுகின்றது. இந்த அஸ்லம் என்கிற அச்சு தற்போது டெல்லியிலுள்ள மாக்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிபி என்ற இடத்தில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் காயமடைந்த இவர் அதன் பின்பே இந்தியப் படைகளால் கைப்பற்றப் பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாகிஸ்தானில் சமீபத்தில் குவெட்டாவில் இடம்பெற்ற தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய அஸ்லம் பலரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளார்.

தற்போது சீனத் தூதரகம் மீது தாக்குதல் தொடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதேவேள சீனத் தூதருடன் சிந்து மாகாண முதல்வர் சயீத்முராத் அலி ஷா தொலைபேசியில் பேசிய போது, சீனர்கள் எமது சகோதரர்கள் போன்றவர்கள். அவர்களின் பாதுகாப்புக்கு வருங்காலத்திலும் முக்கியத்துவம் அளிக்கப் படும் என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்