இந்தியா
Typography

பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள ரவி ஆற்றின் கரையில் உள்ள குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கிய புனிதத் தலத்துக்கு இந்தியாவின் பஞ்சாப் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லை வர தனி வழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சர்வதேச எல்லையில் இருந்து கர்த்தார்பூர் வரை தனி வழி அமைக்க பாகிஸ்தான் அரசுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் வரைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பாதைகளை அமைப்பதற்கான தொடக்க விழா எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அன்றைய தினம் தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த பணிகளைக் காரணம் காட்டி இந்த அழைப்பை சுஷ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார். அன்றைய தினம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் சுஷ்மா சுவராஜ் சார்பாக மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கவுள்ளதாக பாகிஸ்தான் மந்திரிக்கு அவர் எழுதிய பதிற் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்