இந்தியா
Typography

தமிழகத்தில் தீபாவளித் தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 13 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலும் 78 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் காற்று மாசு அதிகம் என்ற காரணத்தால் இம்முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறையக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

பட்டாசு வெடிக்கும் நேரம் வெறும் 2 மணித்தியாலம் அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையுமே வரையறை செய்யப் பட்டிருந்தது. மேலும் அதிக மாசினை ஏற்படுத்தும் குப்பைகளை அதிகரிக்கும் பட்டாசுகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில் நெல்லையில் கட்டுப்பாடை மீறிய 6 பெரியவர்கள் மற்றும் 7 சிறுவர்கள் என 13 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அறிவிக்கப் பட்ட நேரத்தை விட அதிக நேரத்துக்குப் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக திருப்பூரில் 42 பேர், கோவையில் 30 பேர் மற்றும் நெல்லையில் 13 பேர் என தமிழகத்தில் மொத்தம் 78 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது இம்முறையே அதிகபட்சமாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்