இந்தியா
Typography

கர்நாடகாவில் நடந்து முடிந்த 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்று வெளியான இடைத் தேர்தல்களின் முடிவுகள் படி 4 தொகுதிகளில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அதிரடியாக வெற்றி பெற்றதுடன் ஒரு தொகுதியில் மாத்திரம் வெற்றி பெற்ற பாஜக அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

நவம்பர் 3 ஆம் திகதி கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 65% வீத வாக்குகள் பதிவான இத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள பாஜக இனிவரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் எவ்வாறான முன்னேற்றத்தைப் பெறும் என்பது குறித்து கவலையடைந்துள்ளது. கர்நாடகாவில் வெறுமனே ஷிவமோகா நாடாளுமன்றத் தொகுதிகளில் மாத்திரம் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஆயினும் பெல்லாரி, மாண்டியா, ராம நகர் மற்றும் ஜம்கண்டி ஆகிய 4 தொகுதிகளிலும் காங்கிரஸ்- மஜத கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்