இந்தியா
Typography

சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். 

அத்தோடு, தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்றும் சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில், டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 பேரும் நீதிமன்றத்தை அணுகினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று தீர்பினை வழங்கினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்