இந்தியா
Typography

நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் கடுமையான வார்த்தைகளினால் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சை தரும் வகையில் பேசியதற்காக பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.

தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், உணர்ச்சி வசப்பட்டு பேசியதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கோபம் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை தவறு என உணர்ந்தேன் என அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS