இந்தியா
Typography

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து தெளிவான முடிவை டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வருகிற டிசம்பர் 12ம் திகதி ரஜினி பிறந்த நாள் என்பதால் முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியிட வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில், "கட்சிப்பணிகள் 90 வீதம் முடிந்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தல், காலம் நேரம் பார்த்தே கட்சி அறிவிப்பை வெளியிடுவேன், டிசம்பர் 12ம் திகதி எந்த அறிவிப்பும் இருக்காது" என ரஜினிகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே சத்தியநாராயண ராவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு ரஜினியின் கட்சிப் பிண்ணணியில் பாஜக எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்