இந்தியா
Typography

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், மேற்கு வங்கத்தின் பேளூர் ராமகிருஷ்ண மடத்தின் துணை தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய அதே நேரத்தில் பிரதமர் மோடி, அரங்கில் கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். என் இனிய சகோதர , சகோதரிகளே எனக்கூறி பிரதமர் தனது உரையை துவங்கினார்.

இந்திய விடுதலைக்கு அச்சாரமிட்டவர் சுவாமி விவேகானந்தர் என்றும், இன்றைய இளைஞர்களுக்கு அவரது தன்னம்பிக்கை ஓர் முன்னுதாரணம் எனவும் பிரதமர் கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க அரசு பயிற்சி அளித்து வருகிறது எனவும், நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் அடல் டிங்கர் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் எனவும் மோடி தெரிவித்தார். தமிழக அரசும் தமிழக மக்களும் மத்திய அரசின் முத்ரா திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி இருக்கின்றனர் எனவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்