இந்தியா
Typography

நாட்டு மக்கள் பயமின்றி சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் சூழல் வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியுள்ளதாவது: “டில்லியைச் சேர்ந்த அரசியல்வாதி, யோகேந்திர யாதவ், தமிழக விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது, கைது செய்யப்பட்டு உள்ளார். இது, கடும் கண்டனத்திற்குரியது. சட்டத்தை காரணமாக சொல்லி, குரல் எழாமல் செய்யும் இந்த வேலை, சர்வாதிகாரம் என்றே, எனக்கு தோன்றுகிறது. இல்லையென்றால், இது, ஜனநாயக நாடு தான் என்பதை, ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் வழியாக தான், சர்வாதிகாரிகள், உலகம் முழுக்க, ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றனர். அதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள், கருத்துகளை தெளிவாக, பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். இல்லையென்றால், வரவழைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்