இந்தியா
Typography

தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் என்பது, ஜெயலலிதா ஜெயராமின் மரணப்படுக்கையில் இருந்து ஆரம்பித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஊடகங்களிடம் பேசும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அ.தி.மு.க. அரசு, பாரதிய ஜனதாக் கட்சியின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அ.தி.மு.க.வை கைக்குள் கொண்டு வர அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகின்றது. ஏறக்குறைய அ.தி.மு.க. என்பது தற்போது பாரதிய ஜனதாவின் ஒரு பகுதி தான். 4 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5% குறைந்து விட்டது. ஆனால், தவறான கணக்கீட்டின்படி அதனை 7.7 சதவீதமாக காட்ட மத்திய அரசு முயல்கின்றது. பாரதிய ஜனதாவின் ஒரு பகுதியாக அ.தி.மு.க மாறிவிட்ட போதிலும் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்