இந்தியா
Typography

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை போராட்டம் நடத்தி மூடியதால் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில் தனியார் அமைப்பு சார்பில் சன்சத் ரத்னா என்ற பெயரில் சிறந்த பாராளுமன்றவாதிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: “காவிரி பிரச்னைக்கு பெரிய சட்ட தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்துள்ளது. இதற்கு கர்நாடகாவை தவிர அனைத்து மாநிலங்களும் உறுப்பினரை நியமனம் செய்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை மனதில் வைத்து உறுப்பினரை நியமனம் செய்யாமல் கர்நாடகா இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம். இதற்கு கூட இன்று போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்