இந்தியா
Typography

திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். 

சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “திருப்பதி கோயிலை தாரைவார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற தவறி விட்டார்.” என்றுள்ளார்.

திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால் எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து அந்த கடிதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பித்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்