இந்தியா
Typography

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் பா.ஜ.க. அரசு இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையை சேர்ந்த தகவல் அறியும் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அதில், பிரதமர் மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி ஆகும். இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்