இந்தியா
Typography

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்கள் என்கிற கட்டத்தை பா.ஜ.க. தாண்டிவிட்டது. 

கர்நாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பா.ஜ.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 57 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

2013 தேர்தலில் காங்கிரஸ் 224 தொகுதிகளில் 123 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை காட்சிகள் மாறுகிறது. பாரதீய ஜனதா பெரும்பான்மையான இடத்தில் முன்னணியில் உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்