இந்தியா
Typography

காவிரி விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

நாளையே அனைத்து கட்சி தமிழக அரசு கூட்ட வேண்டும் என்றும் அனைத்து விவசாய அமைப்புகளையும் கூட்டத்துக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க செய்ய அனைத்துக்கட்சி கூட்டம் தேவை என்று அவர் கூறியுள்ளார். அரசியல், தேர்தல் இலாபத்துக்காக தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழு அதிகாரமிக்க வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு. வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க முடியாது என வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்