இந்தியா
Typography

மீன்களின் இனப்பெருக்க காலத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு முறை சட்டம், 1983ன் படி, மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், மீன்களின் இனப்பெருக்க காலங்களில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று (15.04.18) முதல் வரும் ஜுன் மாதம் 14 ம் தேதி வரையில் 61 நாட்கள், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி கடற்கரை வரையிலான கிழக்கு கடற்கரையில், மீன் பிடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, விசைப்படகு, இழுவைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்