இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கண்டித்து கருப்புக்கொடி போராட்டம் இன்று வியாழக்கிழமை நடத்தப்படுகின்றது. 

இதனை, தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திரைப்பட இயக்குனர்கள் கூட்டாக அறிவித்தனர்.

இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது: “ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக நடந்தது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டம். இதில் அனைவரும் அறவழியில் போராடினோம். இது வன்முறை அல்ல. வினைக்கு எதிர்வினை இருக்கும். சீருடையில் வந்த காவலர்கள்தான் போராட்டத்தை திசை திருப்பி விட்டார்கள்.

இன்று சென்னைக்கு வரும் பிரதமருக்கு, விமான நிலையம் முன் காலை 9 மணியளவில் கருப்புக் கொடி காட்ட உள்ளோம். சீமான் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். அவரைக் கைது செய்தால், நாங்கள் அனைவரும் கைதாக தயாராக இருக்கிறோம். இயக்குனர் வெற்றிமாறன் என்ன தவறு செய்தார், அவரை ஏன் போலீஸ் தாக்க வேண்டும்? இயக்குனர் களஞ்சியம் போலீஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது காவலர்கள்தான். தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயல்கள் பல இடங்களில் நடந்தது. அவற்றைக் காணொளிகள் மூலம் பார்த்துப் பதறினோம்.

அப்போதெல்லாம் கொடுக்காத குரலை, இப்போது எதற்கு ரஜினி கொடுக்கிறார்? தெரிந்துவிட்டது அல்லவா, அவர் யார் என்று. வாய் அசைவு மட்டும்தான் ரஜினியுடையது. டப்பிங் பேசுவது வேறு யாரோ. அவர் தன்னை முழு அரசியல்வாதி என்று சொல்லி நடக்கட்டும், பிறகு அவரது நடையைப் பற்றி கருத்து சொல்கிறோம். இவ்வாறு கூறினார். அப்போது, மணியரசன், இயக்குனர்கள் சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதமன், ராம், கோபி நயினார், சுரேஷ் காமாட்சி, நடிகர் மனோஜ் கே.பாரதி, எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு உடனிருந்தனர். சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பாரதிராஜா கூறும்போது, ‘தமிழர் அடையாளத்துடன் போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நன்றி.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்